எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயத்தின் பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம், மாண்புமிகு வேந்தர் ஐயா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு “சேவைத் திருநாள் – 2025” நிகழ்வை சிறப்பாகக் கொண்டாடியது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
பசுமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு வளமான பல்வேறு வகை மரக்கன்றுகளை நட்டனர். இயற்கையை காக்கும் பணியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை இந்த நிகழ்வு வலியுறுத்தியது.
மரக்கன்றுகள் வளர்த்து, பசுமை பரப்பை விரிவுபடுத்துவதன் மூலம் எதிர்கால தலைமுறைக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குவோம் என்ற உறுதியும் அனைவரிடமும் தோன்றியது.
இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள், சமூக நலனுக்கான சேவைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவித்தனர்.