எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராயம், சாகித்திய அகாதெமி, மற்றும் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் ஆகியோர் இணைந்து தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டுக் கருத்தரங்கத்தை, 28, 29ஆம் தேதி ஜூலை மாதம் நடத்தினர்.
இந்நிகழ்வு மாணவர்களிடையே கல்வி கற்பதன் நோக்கத்தையும் எண்ணத்தையும் வலுப்படுத்துவதற்காக நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அடிகளாரின் பேச்சுத்திறமை, கொள்கைகள், மற்றும் அவரின் நற்பண்புகளை இந்த நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் மத்தியில் பகிரப்பட்டது.
இந்நிகழ்வின் நோக்கவுரையை வழங்கிய இரா. தாமோதரன் (அறவேந்தன்), ஒருங்கிணைப்பாளர், தமிழ் ஆலோசனைக்குழு, சாகித்திய அகாதெமி, குன்றக்குடி அடிகளாரின் பெருமைகளை பகிர்ந்தார். மேலும், “எதுவாக இருந்தாலும் அறிவியல் கண்ணோட்டத்தில் காண குன்றக்குடி அடிகளார் கூறுகிறார்; நம்முடைய வாழ்க்கையை மாற்ற கல்வியை மட்டுமே கையில் எடுக்கவேண்டும், இதற்கு மாணவர்கள் அனைவரும் அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றை படிக்க முயற்சி செய்யுங்கள்,” என்றார்.
இந்த நூற்றாண்டு கருத்தரங்கத்தை சாகித்திய அகாடெமி நடத்துவதற்கான காரணம், மாணவர்கள் கட்டுரைகள், மற்றும் பல்வேறு முறைகளில் தமிழ் உணர்வை வெளிப்படுத்த ஊக்குவிப்பதற்காக இந்த நூற்றாண்டு கருத்தரங்கத்தை சாகித்திய அகாதெமி நடத்துகிறது.
இதை தொடர்ந்து, தமிழ்ப்பேராயத்தின் தலைவர் கரு. நாகராசன், தனது இளம் வயதில் குன்றக்குடி அடிகளாரின் தமிழ்ப்புலமையையும் பேச்சுதிறமையையும் எண்ணி போற்றியதை மாணவர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
கருத்தரங்கின் தொடக்க விழாவில் சிறப்புரை வழங்கிய பாரதிகிருஷ்ணகுமார், “புத்தகங்கள் கொடுத்து மனிதர்களை நெறிப்படுத்திய பெருமை அடிகளாரையே சேரும் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இரவு 9 மணிக்கு துவங்கும் பட்டிமன்றத்தை தொடர்ந்து 5 மணி நேரம் தரையில் அமர்ந்து அடிகளாரின் மேடைப்பேச்சை கேட்டு பயின்ற மாணவன் நான்.
நான் ஏழையாக இருந்தாலும் எனது பொருளாதாரத்தை பொறுப்பெடுக்காமல், தனக்கு சமமாக மேடையில் அமரவைத்து எனது பேச்சை முழுவதுமாக கவனத்திருக்கிறார்.
என் மேடைப்பேச்சை கேட்ட அடிகளார், எனக்கு ‘பாரதி’ என்ற புனைப்பெயரை வழங்கினார்.
பொன்னம்பல அடிகளார் தன்முன் எவரும் தவறான தகவலை சொன்னால், அவர்களின் பேச்சை நிறுத்திவிட்டு, கூறும் கருத்துக்கு சரியான தரவை கூறிவிட்டு பேச்சை தொடரச் சொல்லுவார்.
இதுமட்டுமல்லாமல், குடிநீர், விவசாயம், கல்வி சார்ந்த பல்வேறு சமூக இன்னல்களுக்கு சமரசமின்றி குரல் கொடுத்துள்ளார்”, அடிகளாரின் பெருமைகளைப் போற்றினார்.
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஆதீன கர்த்தர், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம், “ஒருவர் உயர்ந்த அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதற்காக மட்டும் மதிக்காமல், அவர்களின் அன்பு, பண்பு மற்றும் உயர்ந்த நெறிகளுக்காகவும் மதிக்க வேண்டும்,” என்றுக் கூறி மாணவர்களுக்கு கற்பித்தார்.